Thursday, January 12, 2023

நேரு நினைவுக் கல்லூரியில் மாணவ மாணவிகள் சூரிய பொங்கல் வைத்து கொண்டாட்டம்.

நேரு நினைவுக் கல்லூரியில் மாணவ மாணவிகள் சூரிய பொங்கல் வைத்து கொண்டாட்டம்.


நேரு நினைவுக் கல்லூரியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளி கிழமை  (12,13.01.23) பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பானை உடைத்தல், சாக்கு போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலிதண்ணீர் நிரப்புதல் போன்ற பல்வேறு போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். மேலும் மயிலாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம், பறை இசை போன்ற பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவின் புது முயற்சியாக தொலைநோக்கி வழியாக சூரியனை நேரடியாக கண்டு களித்து சூரிய பொங்கல் வைத்து வழிபட்டனர். 



விழாவின் தொடக்கமாக சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் பொன் பெரியசாமி ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்று வாழ்வில் உயர்நிலை அடைய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன் பாலசுப்பிரமணியம் தலைமை உரை ஆற்றினார். இதில் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றும், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியனுக்கு பொங்கல் படைத்து மகிழ்ந்தனர் என்று கூறினார். மேலும் இயற்கை நமக்கு எல்லா வளங்களும் அளித்து சிறப்புற வாழ்வில் மேன்மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்தினார்.



கல்லூரி செயலர்  பொன் ரவிச்சந்திரன் பேசுகையில் மூத்த குடி தமிழ் மக்கள் பழங்காலத்திலேயே கப்பல் கட்டி வர்த்தகம் செய்தனர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியில் செய்து சாதனை செய்தனர் என்றும் கூறினார். மேலும் தமிழர்கள் என்று நாமெல்லாம் நினைத்து பெருமையுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் குமாரராமன் பேசுகையில் கல்லூரி மாணவர்கள் செயல்பாடுகள் மூலம் கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.


கல்லூரி கல்வி குழு உறுப்பினர் மாலா பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பாரம்பரிய  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக வணிகவரித்துறை இயக்குனர் முனைவர் மதிவாணன் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை தமிழ் துறை தலைவர் முனைவர் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Time 2.50- 3.03












No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...