Wednesday, January 4, 2023

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நட்சத்திர திருவிழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நட்சத்திர திருவிழா.



கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு தான் உலகை புரட்டிப் போட்ட நாள் என்பதை கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நட்சத்திர திருவிழா கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது அந்த மூன்று நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் இதில் பங்கு பெறக்கூடிய அனைவரும் தொலைநோக்கிகள் மூலம் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் கோளையும், நிலா, நட்சத்திரங்கள் மற்ற கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக கண்டு மகிழலாம்.

நேரு நினைவுக் கல்லூரி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அருவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நட்சத்திர திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும். இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வானியல் வல்லுநர்கள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடி வானியல் தொடர்பான விளக்கங்களை கேட்டு அறியலாம்.













No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...