தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
இந்த தேசிய அறிவியல் நாள் கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நிலா திருவிழா தமிழகம் முழுவதும் 200கும் மேற்பட்ட கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பிப்ரவரி 25, 26, 27, 28 நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த நான்கு நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். இதில் பங்கு பெறக்கூடிய அனைவரும் தொலைநோக்கிகள் மூலம் அழகிய நிலா, செவ்வாய், வியாழன்,புதன், வெள்ளி, கோளையும், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக கண்டு மகிழலாம். இந்த திருவிழாவிற்கு நேரு நினைவுக் கல்லூரியில் அதிநவீன தொலைநோக்கி வாங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல் சங்கம்,தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், நேரு நினைவுக் கல்லூரி, அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும். இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வானியல் வல்லுநர்கள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடி வானியல் தொடர்பான விளக்கங்களை கேட்டு அறியலாம்.
தொடர்புக்கு: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, 9489666102.
அழைப்பில் மகிழும்
R. ஆனந்தராஜா, தலைவர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
D. அருள்ஜோதி, துணைத் தலைவர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
D. நிதிஷ் குமார், பொருளாளர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
M.V. இலக்கியப்ரியா, துணை பொருளாளர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
M. ராமலட்சுமி, செயலாளர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
E. தேவநாதன், துணை செயலாளர், NMC ஆஸ்ட்ரோ கிளப்
M. சரிகா, அமைப்புக் குழு, NMC ஆஸ்ட்ரோ கிளப்
M. வினோத்குமார், துணை அமைப்புக் குழு, NMC ஆஸ்ட்ரோ கிளப்
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களதுகட்டுரைகள்(அறிவியல்,பொருளாதாரம்,இலக்கியம்),கவிதைகள்,சிறுகதைஎன அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment