Thursday, February 16, 2023

புத்தனாம்பட்டி கல்லூரியில், கணிதத் துறை சார்பில் கருத்தரங்கு கூட்டம்.

புத்தனாம்பட்டி கல்லூரியில், கணிதத் துறை சார்பில் கருத்தரங்கு கூட்டம்.




துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில்  கருத்தரங்கு கூட்டம் (16/02/2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக புனித தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த கணிதத்துறை பேராசிரியர் முனைவர் ஜெ.மரிய ஜோசப்  அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் எண்களின் அமைப்பு, குவிந்த வரிசை, எல்லைக்குட்பட்ட வரிசை மற்றும் அவற்றின் பண்புகள் பற்றியும் உதாரணத்துடன் எடுத்துரைத்தார். மேலும் மாநில அளவிலான தகுதி தேர்வு (SET), தேசிய அளவிலான தகுதி தேர்வு (NET) பற்றி விரிவாகவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வின் தொடக்கத்தில் கணிதத் துறை தலைவர் திருமதி P.பாக்கியலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. பொன். A.R பெரியசாமி அவர்கள் துவக்க உரை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் தலைவர் திரு. பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையுரை வழங்கி பெருமைசேர்த்தார். கல்லூரியின் செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். அதனைத்தொடர்ந்து சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு M.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். கருத்தரங்கின் முடிவில் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கணிதத்துறையைச் சேர்ந்த அறுபது மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக  கணிதத்துறை பேராசிரியர் C.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கி பெருமை சேர்த்தார். இக்கருத்தரங்கு கூட்டத்தை கணிதத் துறையின் தலைவி,பேராசிரியை P. பாக்கியலெட்சுமி அவர்கள் ஏற்பாடு செய்தார்.

















No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...