Friday, February 17, 2023

தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் நட்சத்திர திருவிழா.

தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் நட்சத்திர திருவிழா. 


கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். அதை போற்றும் விதமாக நட்சத்திர திருவிழா 17.02.2023ல் நடத்தப்படுகிறது. 


இதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்,  எய்டு இந்தியா மற்றும் நேரு நினைவு கல்லுரி, நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில்  நட்சத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், செவ்வாய் கோள், வெள்ளி கோள் ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன்  வானியல் நிகழ்வுகளை கண்டு களித்து, அறிவுப்பூர்வமான பல கேள்விகளையும் கேட்டு அதற்கான விடைகளையும் தெரிந்து கொண்டனர்.

மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன் ஆனந்தராஜா,  மற்றும்  பாஸ்கரன், மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியல் படிக்கும் ஹரிஹர வள்ளியப்பன் மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர். இந்த விழாவில் 80க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.












No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...