Wednesday, January 27, 2021

முதல் அம்மோனியா மேசரை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற சார்லஸ் ஹார்ட் டவுன்ஸ் நினைவு தினம் இன்று (ஜனவரி 27, 2015).

முதல் அம்மோனியா மேசரை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற சார்லஸ் ஹார்ட் டவுன்ஸ் நினைவு தினம் இன்று (ஜனவரி 27, 2015).


சார்லஸ் ஹார்ட் டவுன்ஸ் (Charles Hard Townes) ஜூலை 28, 1915ல்   டவுன்ஸ் தென் கரோலினாவின் கிரீன்வில்லில் பிறந்தார். ஸ்காட்டிஷ், ஆங்கிலம், வெல்ஷ், ஹுஜினோட் பிரஞ்சு மற்றும் ஸ்காட்ச் ஐரிஷ் ஆகிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஹென்றி கீத் டவுன்ஸ் ஒரு வழக்கறிஞராக இருந்தார். இவரது தாய் எலன் சம்மர் டவுன்ஸ் ஆவார். டவுன்ஸ் பர்மன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளாம் அறிவியல் பட்டமும், நவீன மொழிகளில் இளங்கலைப் பட்டத்தினை 1935 ஆம் ஆண்டில் பெற்றார். டவுன்ஸ் 1937 ஆம் ஆண்டில் டியூக் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் 1939 அம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போரின் போது, பெல் ஆய்வுக் கூடங்களில் தொலைக் கண்டுனர்வி குண்டுவெடிப்பு முறைகளில் பணியாற்றினார். 



Tumblr GIF | Gfycat

1950 ஆம் ஆண்டில், டவுன்ஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1950 முதல் 1952 வரை கொலம்பியா கதிர்வீச்சு ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். அவர் 1952 முதல் 1955 வரை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தார். 1953 ஆம் ஆண்டில், டவுன்ஸ், ஜேம்ஸ் பி. கார்டன் மற்றும் ஹெர்பர்ட் ஜே. ஜீகர் ஆகியோருடன் இணைந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதல் அம்மோனியா மேசரை உருவாக்கினார். டவுன்ஸ் 1941 ஆம் ஆண்டில் வீடற்றவர்களுக்கு சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலரான பிரான்சிஸ் எச். பிரவுனை மணந்தார். கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான சோதனை இயற்பியலாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்" என்று பெர்க்லியில் இயற்பியல் பேராசிரியரான ரெய்ன்ஹார்ட் ஜென்செல் டவுன்ஸ் பற்றி கூறினார். கிறித்துவ மதத்தின் மீது இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 



RGB Laser Stage Light Projector Voice-control KTV DJ Disco Stage Party Show  Club Light | Laser stage lighting, Club lighting, Stage lighting

1964 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை நிகோலே பாசோவ் மற்றும் அலெக்சாண்டர் புரோகோரோவ் ஆகியோருடன் இணைந்து பெற்றுக் கொண்டார். 1956 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாதமியின் நிரந்த உறுப்பினராக ஆனார். 1957 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் ரிச்மயர் நினைவு விருதினைப் பெற்றார். 1945 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த ஹாரி ட்ரூமன் முதல் 1999 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வரை டவுன்ஸ் அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகராக இருந்தார். முதல் அம்மோனியா மேசரை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற சார்லஸ் ஹார்ட் டவுன்ஸ் ஜனவரி 27, 2015ல் தனது 99வது அகவையில் கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...