Monday, April 24, 2023

நேரு நினைவு கல்லூரியில் பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு.

நேரு நினைவு கல்லூரியில்  பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு.


எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த  நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார். பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, இல்லையா அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம். இது வருடத்திற்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் நிகழும். நமது இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து (குஜராத்) தென் பகுதி இறுதி (கன்னியாகுமரி) வரை இருக்கும் இடங்களில் நிகழக்கூடியது.  இந்த வருடம்  ஏப்ரல் பத்தாம் தேதி முதல் இன்று (24 ஏப்ரல்) வரை நிழலில்லாத நாள் தமிழ்நாட்டில்  தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒவ்வொரு நாளும்   நடைபெற்று வருகிறது. ஒரே அட்ச ரேகையில் இருக்கும் பகுதிகளில் (சென்னை,  திருவள்ளூர்) ஒரே நாளில் நிழல் இல்லாத நாள் நடைபெறும். இன்று 24.04.23 திங்கள்கிழமை சென்னையில் நிழல் இல்லாத தினம் ஆகும்.



மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல் பலகை இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது.

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி தலைமை வகித்தார். இயற்பியல்  துறை தலைவர் முனைவர் வெங்கடேசன், இயற்பியல்  துறை பேராசிரியர்கள் பாலமுருகன், கபிலன்,  ரமேஷ்,  ரமேஷ் பாபு,  முருகானந்தம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் மதியம் 11:55 மணி முதல் 12.35 மணி வரை சோதனை செய்து சோதனை பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு அளக்கப்பட்டது. சென்னைக்கும் புத்தனாம்பட்டிக்கும் உள்ள ஆர தொலைவை வைத்தும் குச்சியின் நிழலை வைத்தும் பூமியின் ஆரம் மற்றும் சுற்றளவு கண்டறியப்பட்டது.














இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...