Sunday, July 30, 2023

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட்.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட்.

இன்று ஜூலை 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 6.30 மணிக்கு 7 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்  ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. மொத்தம் 7 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி 56 ராக்கெட் கிளம்பியிருக்கிறது. 7 செயற்கைக்கோள்களில், சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவி நோக்கு செயற்கைகோள் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை, தொடர்ந்து விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி   வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியையும் மேற்கொண்டு  வருகிறது அந்த வகையில் இஸ்ரோ  , சிங்கப்பூருக்குச் சொந்தமான டி எஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த 7 செயற்கைகோள்களில், டிஎஸ்-சார் செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டது. சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இரவு, பகல் என அனைத்து பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ) உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ சிறிய வடிவிலான மற்றும் வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை வடிவமைத்து விண்ணில் செலுத்தி வருகிறது.  அந்த வகையில் ஏப்ரல் 22ம் தேதி வர்த்தக ரீதியிலான பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.












இது போன்ற தகவல் பெற

Saturday, July 29, 2023

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

 

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற

Friday, July 28, 2023

நேரு நினைவுக் கல்லூரி சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்.

நேரு நினைவுக் கல்லூரி சார்பில் உலக இயற்கை  வள பாதுகாப்பு தினம்.


புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரித் தலைவர் பொறியாளர். பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், முதல்வர். முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் K.T.தமிழ்மணி, ஒருங்கிணைப்பாளர்முனைவர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். T.காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டனர்.



மேலும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் நடத்தப்பட்டது. பேரணியை கல்லூரி தலைவர் பொறியாளர். பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் I.சுமதி, முனைவர் G.பாலசுப்ரமணியன், முனைவர் A.பிரபு மற்றும் திருமதி.  S.துர்கா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வின்முடிவில் வணிகவியல் துறை மாணவ-மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் “உறுதிமொழி” ஏற்றனர். 

News6 tamil Link

Arasiyal today News Link












இது போன்ற தகவல் பெற

Tuesday, July 25, 2023

சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட நேரு நினைவு கல்லுரி மாணவி.

சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட நேரு நினைவு கல்லுரி மாணவி. 


நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து கடந்த மே மாதம் தேர்வு செய்தது.  இந்தியா முழுவதும் இருந்து இயற்பியல் கோடை பயிற்சி பெற 18 பேர் மட்டுமே தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் முனைவர் G.அரவிந்த் அவர்கள் வழிகாட்டுதலின் படி எடை நிறமாலைமானி மூலம் அயனிகளின் நிறையை கணக்கிடும் ஆய்வு மேற்கொண்டார்.


நிறை நிறமாலைமானி அணுக்கள்,  மூலக்கூறுகள்  மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட துகள்களை அந்தந்த மின்சுமை  அவற்றின் நிறை  விகிதங்களில் உள்ள வேறுபாடுகளைப் பயன்படுத்தி பிரிக்கிறது. இது  அணுக்களின் சரியான மூலக்கூறு நிறையை அளவிட பயன்படுகிறது. இந்த முறையில் அயனிகள் வலிமையின் மின்சார புலத்தால் முடுக்கிவிடப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு அயனிகலும் நிறமாலைமானி கருவியை அடைய எடுக்கும் நேரம் அளவிடப்படுகிறது. அயனிகள் அனைத்தும் ஒரே மின்னூட்டத்தைக் கொண்டிருந்தால், அவற்றின் இயக்க ஆற்றல் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, ஒவ்வொரு அயனியும் வேகம் அதன் நிறையை பொறுத்தது. இதன் மூலம் ஓர் இடத்தில் உள்ள தனிமங்களின் வகை மற்றும் நிறையை அறியலாம். இந்த உருவகப்படுத்துதல்கள் SIMION 8.0 மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்த ஆய்வு மூலம் கனமான நிறை கொண்ட அணுவை விட இலகுவான நிறை கொண்ட அணு அதிகமாக பிரிவடைதை கண்டறிந்தார். 


இந்த ஆய்வு செய்வதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 12,000 ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார். இந்த ஆய்வு மேற்கொண்ட மாணவியை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமாரராமன் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் கபிலன் ஆகியோர் பாராட்டினர்.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும...