Wednesday, August 30, 2023

"Super Blue Moon" - இன்று நிகழவுள்ள அரிய வானியல் நிகழ்வு..

"Super Blue Moon" - இன்று நிகழவுள்ள அரிய வானியல் நிகழ்வு..

சூப்பர் மூன் - ப்ளூ மூன் 

- பா. ஶ்ரீகுமார் 

ஆகஸ்ட் 30 - இன்று சூரியன் மறையும் போது, 2023 இன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவு கிழக்கில் உதயமாகும். ஒரு சூப்பர் ப்ளூ மூன் என்பது - ப்ளூ மூன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவற்றை இணைக்கும் மிகவும் அரிதான வான நிகழ்வு ஆகும். நிலவு பூமியை நீள்வட்ட ( கோழி முட்டை போன்றது) பாதையில் சுற்றி வருகிறது. இதன் பொருள் அதன் சுற்றுப்பாதையின் போது அது பூமிக்கு அருகில் இருக்கும் போது அதன் புள்ளிகளை(பெரிஜி) மற்றும் அது தொலைவில் இருக்கும் போது அதன் புள்ளிகளை (அபோஜி) என்று  குறிப்பிடுகிறோம். ஒரு முழு நிலவு பெரிஜியின்  அருகில் வரும்போது    போது ஒரு சூப்பர் மூன் ஏற்படுகிறது,

(நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நிலை - அப்போஜி - சூப்பர் ப்ளூ மூன் இன்று, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை வலம் வரப்போகிறது- பெரிஜி) இதனால் நிலவு 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும்.

அது என்ன ப்ளூ மூன்: 

ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன்" என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அர்த்தம் எப்போதாவது அதிசயமாக ஒருமுறை வருவது. சாதாரணமாக உங்கள் நண்பரோ, உறவினரோ அடிக்கடி உங்களை சந்திக்காமல் இரண்டு மூன்று வருடம் கழித்து சந்திக்கும்போது இந்த பதத்தை பயன்படுத்தலாம். ப்ளூ மூன் என்பது வெறும் ஒரு சொல்லாடல்தான். 

பொதுவாக, ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு முழு நிலவு மட்டுமே இருக்கும், நிலவின் சுழற்சியில் சுமார் 29.5 நாட்கள் இருக்கும், சூப்பர் மூன் தோராயமாக 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். 

அதாவது ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு - பௌர்ணமி வருவதை ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள். இதனால் நிலவு நீல நிறமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். 

ஆகஸ்ட் 30-31 முழு நிலவு மாதத்தின் இரண்டாவது முழு நிலவு ஆகும். எனவே, இது நீல நிலவு ( ப்ளூமூன்) என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளையும் (பெரிஜியைச் சுற்றியுள்ள ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது முழு நிலவு) ஒருங்கிணைத்து, இன்றிரவு பார்க்கக்கூடிய சூப்பர் ப்ளூ மூன்னாக உள்ளது. இந்த மாதம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முழு நிலவு தெரிந்தது, அதற்குப் பிறகு ஆகஸ்ட் 30 மீண்டும் முழு நிலவு தெரிகிறது. இந்த நிகழ்வை தான் ப்ளூ மூன் என்று குறிப்பிடுகிறார்கள். 

இருப்பினும், இந்த நிகழ்வை இன்னும் சிறப்பாக்கும் மற்றொரு விஷயம் உள்ளது. ஆகஸ்ட் 30 இரவு நீங்கள் நிலவைப் பார்க்கும்போது, ​​அதற்கு அருகில் ஒரு பிரகாசமான ஒளியைக் காண்பீர்கள். இது ஒரு நட்சத்திரம் அல்ல, அது அழகிய வளையத்தைக் கொண்ட சனி கிரகம். இரண்டு வான் பொருட்களும்  சில டிகிரி இடைவெளியில் இருக்கும். 

இன்று இரவு வானில் இந்த அற்புதமான காட்சியை பார்த்து  பரவசப்படுங்கள்.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  • இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...