Wednesday, February 28, 2024

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் தமிழர்: அவர் யார் தெரியுமா?

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் தமிழர்: அவர் யார் தெரியுமா?


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் 'ககன்யான்' திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இத் திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சுபானஷு சுக்லா ஆகியோரின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். விண்வெளி வீரர்களுக்கான சிறகு பட்டையை அவர்களின் சீருடையில் குத்திய பிரதமர், 'நாட்டின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை ஏந்தி நிற்கும் 4 சக்திகள்' என்று பாராட்டு தெரிவித்தார்.

ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்தச் சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதற்கான திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கல மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, ஒன்றுமுதல் 3 நாள்கள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே இத் திட்டத்தின் நோக்கம். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, கடலில் தரையிறக்கும் வகையில் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதற்கென இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வீரர்களைச் சுமந்து செல்லும் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, தரையிலிருந்து 11.6 கி.மீ. உயரம் சென்றதும் ராக்கெட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பத்திரமாக கடலில் தரையிறக்கப்பட்டது. அப்போது விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பாராசூட்டுகள் விரிதல் உள்ளிட்ட சோதனைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்ட சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். நிகழாண்டு இறுதியில் அல்லது 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மற்றும் விண்கலனில் முதல் முறையாக இந்திய வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் இத் திட்டம் இந்தியர்களிடையே மட்டுமின்றி, உலக அளவிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 இந்திய வீரர்களின் பெயர்களை அறிவித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த 4 இந்திய விமானப் படை வீரர்களுக்கு ரஷியாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியா விண்வெளிக்குள் நுழையவிருக்கிறார். இம்முறை, முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்திய வீரர்கள் விண்வெளிக்கு முதல் முறையாக அனுப்பப்படவிருக்கின்றனர்.

சுகன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான இயந்திரங்களும், உபகரணங்களும் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. நாட்டின் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர், நிலவின் தென் துருவத்தை ஆயவு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டத்தில் பங்காற்றியது போன்று. ககன்யான் திட்டமும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இன்றி சாத்தியமாகாது. விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் வெற்றிகள், இளைய தலைமுறையினரிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டுமின்றி, 21-ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கவும் உதவும். 

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்காக வளர்ந்து, 4,400 கோடி டாலா மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் சாவதேச வாத்தக மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது வரும் நாளிகளில், நிலவுக்கு மீண்டும் விண்கலனை அனுப்பி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது வரும்

உருவெடுத்துள்ளது. வரும் நாளிகளில், நிலவுக்கு மீண்டும் விண்கலனை அனுப்பி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2035-இல் சொந்த விண்வெளி மையத்தையும் இந்தியா அமைக்கும் என்றார்.

ரூ.1,800 கோடி மதிப்பில் 3 திட்டங்கள்:

முன்னதாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுகளின் சீரான காற்று வெளிப்படுத்துதல் செயல்பாட்டை பரிசோதிக்கும் 'ட்ரைசோனிக காற்று சுரங்கப் பாதை அமைப்பு, தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செமி-கிரையோஜெனிக் என்ஜின் மற்றும் என்ஜினின் பலவேறு நிலை பரிசோதனை சோதனை வசதி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகியவற்றை பிரதமா மோடி தொடங்கி வைத்தார். இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவிருக்கும் இந்த மூன்று திட்டங்களும் ரூ 1,800 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


சென்னையில் அஜித் கிருஷ்ணன் 1982ம் ஆண்டு ஏப்ரல்19ம் தேதி பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர். அவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றவர்.

அஜித் கிருஷ்ணன், 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார். அஜித் கிருஷ்ணனுக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் சூ-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாக்குவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.



Wednesday, February 21, 2024

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக வாய்மொழி அல்லாத செய்தி தொடர்பியியல்-கருத்தரங்கு.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக வாய்மொழி  அல்லாத செய்தி தொடர்பியியல்-கருத்தரங்கு.


திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக "வாய்மொழி அல்லாத செய்தி தொடர்பியியல்" (Non-verbal communication)  என்ற தலைப்பில் 21 பிப்ரவரி 2024 புதன் கிழமை காலை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையுரையாற்றி பேசிய போது வளர்ந்துவரும் விஞ்ஞான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களின் பன்முக திறமைகளை வளர்த்து கொண்டால்  தான் மாணவர்கள் நல்ல பதவிகளில் அமர முடியும் என்று கூறினார்.


கல்லூரி செயலார் அவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய போது வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு செய்தி தொடர்பில் திறனை வளர்த்துக் கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தி கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் A.வெங்கடேசன், துணை முதல்வர் K.Tதமிழ்மணி,    சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உரையாற்றிய போது மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள கல்லூரியில் உள்ள வசதிகளை முழமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் N.S. சிபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 


மாணவர்கள் வாய்மொழி  அல்லாத செய்தி தொடர்பியியல் திறனை எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டுமென கூறியதுடன், அமெரிக்கா, ஜப்பான் ஆசியா போன்ற நாடுகளில் இத்திறனிற்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என கூறினார். மேலும் ஒரு மனிதனின் முக்கிய உடல் உறுப்புகளான கண், காது, மூக்கு, கை, கால்களையெல்லாம் எவ்வாறு பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று கூறியதுடன் ஒவ்வொரு நாடுகளிலும் எந்த மாதிரியான செய்தி தொடர்பியலை பயன் படுத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் சிறந்த வேலை வாய்ப்பினை பெற முடியுமென வலியுறுத்தி கூறினார். 


முன்னதாக உதவி பேராசிரியர்  R.உமா மகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகவியல் இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இறுதியாண்டு படிக்கும் இளம் வணிகவியல் மற்றும் முது வணிகவியல் மாணவர்கள் 230 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இறுதியாக உதவி பேராசிரியர் S.சரவணகுமார் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Saturday, February 17, 2024

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3DS-இனி துல்லியமாகவானிலை மாற்றத்தை கணிக்கலாம்.

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3DS-இனி துல்லியமாகவானிலை மாற்றத்தை கணிக்கலாம்.


வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 2,275 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளில் 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக இன்சாட்-3 டிஎஸ் தரும்.



18 நிமிடங்களில் 36.000 கி.மீ. தூரத்தில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள. இந்த செயற்கைகோள், நிலம் மற்றும் கடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை கொடுக்கும். காட்டுத் தீ, புகை, பனி, பருவநிலை குறித்து ஆய்வுகளை நடத்த வழிவகுக்கும் 4 விதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

இம்மேஜரி கருவி துல்லியமான வானிலையை உணர்த்தும் ஈரப்பசை, காற்று திசை உள்ளிட்டவற்றை அறிய 19 சேனல்கள் உள்ளன. ஏற்கெனவே செயல்படும் செயற்கைகோளுடன் இணைந்து செயல்படும். மிகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் பெறப்படும்.


இந்த செயற்கை கோளுக்கு “நாட்டி பாய்” என இஸ்ரோ செல்லப் பெயரிட்டுள்ளது. விண்ணில் 10 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோளால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிந்து சொல்லும் இன்சாட்-3டிஎஸ் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸெல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜி.எஸ்.எல்.வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்." எனக் கூறினார்.


















ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...