Wednesday, March 27, 2024

அகில இந்திய உயர்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் மாணவி.

அகில இந்திய உயர்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் மாணவி.

நேரு நினைவுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை  இயற்பியல் பயிலும் M.V. இலக்கியப்பிரியா வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். ஆசிரியரின் வழிகாட்டுதலோடு கடந்த கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை (Joint Admission Test for Masters) (JAM) தேர்வுக்கு  விண்ணப்பித்து இருந்தார்.அதன் படி பயிற்சி எடுத்து கடந்த 11 பிப்ரவரி 2024ல் தேர்வு எழுதினார். இதன் தேர்வு முடிவுஇப்போது வெளியிடப்பட்டதில் அகில இந்திய அளவில் உயர் தரவரிசையுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை கல்லூரி தலைவர், செயலர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், துறைத் தலைவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை தேர்வு என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மற்றும் ஏனைய சிறந்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு பாடங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க  நடத்தும் தேர்வாகும். முதநிலை அறிவியல், முதுநிலை-முனைவர் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மற்றும் இளநிலை அறிவியல் பட்டத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரே தேர்வின் மூலம் சேர்க்கையை நடத்துவதும், அறிவியலை ஒரு பணிவிருப்பாக அறிவுத்திறனுள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்வதும் இத்தேர்வின் குறிக்கோள். நாளடைவில் இத்தேர்வு நாட்டின் பட்டப்படிப்பில் அறிவியல் கல்வித் தரத்தின் தரக்குறியீடாக விளங்கும்.

Tamil samayam News Link

Trichy Mail News Link

King 24x7 News Link

Getlokalapp News Link

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, March 21, 2024

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் சம பகல் இரவு நாள் மூலம் பூமியின் ஆரத்தை கணக்கிடும் ஆய்வு.

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் சம பகல் இரவு நாள் மூலம் பூமியின் ஆரத்தை கணக்கிடும் ஆய்வு.

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 21 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.

நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து சம பகல் இரவு நாள் நிகழ்வு நடத்தியது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர்  திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர்  அ.வெங்கடேசன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியர்கள் கபிலன்,  ரமேஷ்,  ரமேஷ் பாபு,  முருகானந்தம், ரக்ஷனி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இன்று 21.03.24 வியாழக்கிழமை மதியம் 12:18 மணி அளவில் சோதனை மூலம் சம பகல் இரவு நாள் நிகழ்வு மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பூமியின் ஆரத்தை ஏறத்தாழ சரியாக கணக்கிட்டனர். 

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Wednesday, March 20, 2024

ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (RAC) பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (RAC) பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த  சுமார் 20 மாணவ, மாணவிகள் ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி (ரேடியோ தொலைநோக்கி) தென்னிந்தியாவின் உதகமண்டலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது இந்திய அரசின் அணு சக்தித் துறையினால் நிதியுதவி அளிக்கப்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் (NCRA) ஒரு பகுதியாகும். ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (ORT) 530 மீ நீளத்தையும், 30 மீட்டர் அகலத்தையும் உடைய உருளைவடிவ பரவளையவுரு தொலைநோக்கியாகும். இது 326.5 MHz அதிர்வெண்ணில், முன் முனையில் அதிகபட்சமாக 15 MHz அலை நீளத்தில் இயங்குகிறது.

துருப்பிடிக்காத எஃகு கம்பிகள் பரவளைய பிரதிபலிப்பானை உருவாக்குகின்றன. ஊட்டி ரேடியோ தொலைநோக்கி இந்திய உள்நாட்டு தொழில்நுட்ப வளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ORT 1970 இல் நிறைவு செய்யப்பட்டது. மேலும் இது உலகின் மிகவும் உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. சூரிய குடும்பம், பால்வெளி மண்டலம், விண்மீன் மண்டலம் மற்றும் கோள்களின்   நிகழும் பல்வேறு நிகழ்வுகளை விளக்குகிறது. தொலைநோக்கியின் பிரதிபலிப்பு மேற்பரப்பு 1,100 மெல்லிய துருப்பிடிக்காத எஃகு கம்பிகளால் ஆனது. சிலிண்டரின் முழு நீளத்திற்கும் ஒன்றுக்கொன்று இணையாக இயங்குகிறது மற்றும் 24 ஸ்டீரபிள் (steerable) பரவளைய சட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 90-டிகிரி  பிரதிபலிப்பான் முன் 1,056 அரை-அலை இருமுனைகளின் வரிசை தொலைநோக்கியின் முதன்மை ஊட்டமாக அமைகிறது. இது 2.3deg x 5.5sec(dec)' என்ற கோணத்தைக் கொண்டுள்ளது.

ஊட்டி தேயிலை தொழிற்சாலை மற்றும் அருங்காட்சியகம் பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த  சுமார் 20 மாணவ, மாணவிகள் ஊட்டி தேயிலை தொழிற்சாலை மற்றும் அருங்காட்சியகம் நிறுவனத்தை பார்வையிட்டனர். தேயிலை செடியில் இருந்து இலையை பறித்து அந்த இலையை பதப்படுத்தி, வெப்பப்படுத்தி 12 விதமான மாற்றங்கள் அடைந்து  தேனீர் தூளாக எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று விளக்கினார்கள். மேலும் தேனீர் மியூசியத்தில் பழங்காலம் முதல் இன்று வரை தேனீர் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது, எங்கிருந்து தேநீர் வந்தது போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. சாக்லேட் பேட்டரியில் சாக்லேட் தயாரிக்கும் முறையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். சுவையான தேநீர் அருந்தி சாக்லேட்டையும் பருகி மகிழ்ந்தனர்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Tuesday, March 19, 2024

மாணவர்களின் ஆற்றல் அளப்பரியது- நேரு நினைவு கல்லூரி ஆண்டு விழாவில் கவிஞர் நந்தலாலா பேச்சு.

மாணவர்களின் ஆற்றல்  அளப்பரியது- நேரு நினைவு கல்லூரி ஆண்டு விழாவில் கவிஞர் நந்தலாலா பேச்சு.

ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை ஆற்றி, கல்லூரி ஆண்டு அறிக்கையை வாசித்தார். கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்தி, வரும் ஆண்டுகளில் மேன்மேலும் வெற்றிகளை பெற வேண்டும் என்று தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் அனைவரும் சிறப்பாக பயின்று பல்கலைக்கழக தரவரிசை பெற வேண்டும் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு சாதனை புரிய வேண்டும் என்று  வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் உயர்வான எண்ணம் இருந்தால் மென்மேலும் உயரலாம் என்று வாழ்த்துரை வழங்கினார்.  கல்லுரி குழு உறுப்பினர் மாலா பாலசுப்பிரமணியன், திறன் மேம்பாட்டு இயக்குனர் சூர்யா,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவிஞர் நந்தலாலா அவர்கள் நேருவின் பெயரால் அண்ணா திறந்து வைத்த கல்லூரியில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ்நாடு தனித்துவமாக இருப்பதற்கு தன் சொந்த அறிவால் சிந்திப்பவர்கள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்று பேசினார். மேலும் அண்ணாவைப் போல் படித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் நிச்சயம் உயர்நிலை அடையலாம் என்றும் ஹென்றி போர்ட் உருவாக்கிய காரைவிட ஏழு மடங்கு குறைவான விலையில் நமது கோயம்புத்தூரை சேர்ந்த ஜிடி நாயுடு கார் உருவாக்கினார் என்பது நம் தமிழர்களுக்கு அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என்று பேசினார். முதன் முதலில் உலகை சுற்றிய முதல் தமிழனும், திருச்சியை சேர்ந்த பெண்கள் கல்லூரிக்கு  முதன் முதலில் பேருந்து வழங்கியதும் ஜிடி நாயுடு தான் என்றும் கூறினார். ஒரு குயவன் களிமண்ணை பத்து முறை சுற்றினால் அது பானையாக மாறுகிறது. ஆனால் பூமி எத்தனை முறை சுற்றியும் மனிதன் என்றும் களிமண்ணாகவே இருக்கிறான் என்று ஒரு மாணவன் எழுதிய கவிதையே மேற்கோள் காட்டி மாணவர்களின் ஆற்றல் அளப்பரியது என்று எடுத்துரைத்தார். 

ஒருவரின் படிப்பை எவரும் திருட முடியாது, கொடுத்தால் குறையாத கல்வி என்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஒருவரின் மனது அறிவு உடம்பு ஆகியவை சரியாக இருந்தால் உலகையே ஆளலாம் என்றும் எடுத்துரைத்தார்.  பேரறிஞர் அண்ணா, மகாத்மா காந்தி, ஜிடி நாயுடு, அப்துல் கலாம் ஆகியோரை போல் நல்லவராய் வாழ்ந்தால் உலகமே கொண்டாடும் என்று அவர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்  ஆகியோரின் அறிவுரை கேட்டு நடக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் கைபேசி போன்ற மின்னணு சாதனங்களை தவிர்த்து நேரத்தை செலவிட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். 

ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் இரா.மதிவாணன் நன்றி வரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை தமிழ் துறை தலைவர் முனைவர் பிரபாகரன் மற்றும் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...