ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (RAC) பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.
நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி (ரேடியோ தொலைநோக்கி) தென்னிந்தியாவின் உதகமண்டலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது இந்திய அரசின் அணு சக்தித் துறையினால் நிதியுதவி அளிக்கப்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் (NCRA) ஒரு பகுதியாகும். ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (ORT) 530 மீ நீளத்தையும், 30 மீட்டர் அகலத்தையும் உடைய உருளைவடிவ பரவளையவுரு தொலைநோக்கியாகும். இது 326.5 MHz அதிர்வெண்ணில், முன் முனையில் அதிகபட்சமாக 15 MHz அலை நீளத்தில் இயங்குகிறது.
துருப்பிடிக்காத எஃகு கம்பிகள் பரவளைய பிரதிபலிப்பானை உருவாக்குகின்றன. ஊட்டி ரேடியோ தொலைநோக்கி இந்திய உள்நாட்டு தொழில்நுட்ப வளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ORT 1970 இல் நிறைவு செய்யப்பட்டது. மேலும் இது உலகின் மிகவும் உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. சூரிய குடும்பம், பால்வெளி மண்டலம், விண்மீன் மண்டலம் மற்றும் கோள்களின் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை விளக்குகிறது. தொலைநோக்கியின் பிரதிபலிப்பு மேற்பரப்பு 1,100 மெல்லிய துருப்பிடிக்காத எஃகு கம்பிகளால் ஆனது. சிலிண்டரின் முழு நீளத்திற்கும் ஒன்றுக்கொன்று இணையாக இயங்குகிறது மற்றும் 24 ஸ்டீரபிள் (steerable) பரவளைய சட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 90-டிகிரி பிரதிபலிப்பான் முன் 1,056 அரை-அலை இருமுனைகளின் வரிசை தொலைநோக்கியின் முதன்மை ஊட்டமாக அமைகிறது. இது 2.3deg x 5.5sec(dec)' என்ற கோணத்தைக் கொண்டுள்ளது.
ஊட்டி தேயிலை தொழிற்சாலை மற்றும் அருங்காட்சியகம் பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.
நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் ஊட்டி தேயிலை தொழிற்சாலை மற்றும் அருங்காட்சியகம் நிறுவனத்தை பார்வையிட்டனர். தேயிலை செடியில் இருந்து இலையை பறித்து அந்த இலையை பதப்படுத்தி, வெப்பப்படுத்தி 12 விதமான மாற்றங்கள் அடைந்து தேனீர் தூளாக எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று விளக்கினார்கள். மேலும் தேனீர் மியூசியத்தில் பழங்காலம் முதல் இன்று வரை தேனீர் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது, எங்கிருந்து தேநீர் வந்தது போன்ற விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. சாக்லேட் பேட்டரியில் சாக்லேட் தயாரிக்கும் முறையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். சுவையான தேநீர் அருந்தி சாக்லேட்டையும் பருகி மகிழ்ந்தனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment