மாணவர்களின் ஆற்றல் அளப்பரியது- நேரு நினைவு கல்லூரி ஆண்டு விழாவில் கவிஞர் நந்தலாலா பேச்சு.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை ஆற்றி, கல்லூரி ஆண்டு அறிக்கையை வாசித்தார். கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்தி, வரும் ஆண்டுகளில் மேன்மேலும் வெற்றிகளை பெற வேண்டும் என்று தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் அனைவரும் சிறப்பாக பயின்று பல்கலைக்கழக தரவரிசை பெற வேண்டும் என்றும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு சாதனை புரிய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் உயர்வான எண்ணம் இருந்தால் மென்மேலும் உயரலாம் என்று வாழ்த்துரை வழங்கினார். கல்லுரி குழு உறுப்பினர் மாலா பாலசுப்பிரமணியன், திறன் மேம்பாட்டு இயக்குனர் சூர்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் நந்தலாலா அவர்கள் நேருவின் பெயரால் அண்ணா திறந்து வைத்த கல்லூரியில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ்நாடு தனித்துவமாக இருப்பதற்கு தன் சொந்த அறிவால் சிந்திப்பவர்கள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்று பேசினார். மேலும் அண்ணாவைப் போல் படித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் நிச்சயம் உயர்நிலை அடையலாம் என்றும் ஹென்றி போர்ட் உருவாக்கிய காரைவிட ஏழு மடங்கு குறைவான விலையில் நமது கோயம்புத்தூரை சேர்ந்த ஜிடி நாயுடு கார் உருவாக்கினார் என்பது நம் தமிழர்களுக்கு அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என்று பேசினார். முதன் முதலில் உலகை சுற்றிய முதல் தமிழனும், திருச்சியை சேர்ந்த பெண்கள் கல்லூரிக்கு முதன் முதலில் பேருந்து வழங்கியதும் ஜிடி நாயுடு தான் என்றும் கூறினார். ஒரு குயவன் களிமண்ணை பத்து முறை சுற்றினால் அது பானையாக மாறுகிறது. ஆனால் பூமி எத்தனை முறை சுற்றியும் மனிதன் என்றும் களிமண்ணாகவே இருக்கிறான் என்று ஒரு மாணவன் எழுதிய கவிதையே மேற்கோள் காட்டி மாணவர்களின் ஆற்றல் அளப்பரியது என்று எடுத்துரைத்தார்.
ஒருவரின் படிப்பை எவரும் திருட முடியாது, கொடுத்தால் குறையாத கல்வி என்று கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஒருவரின் மனது அறிவு உடம்பு ஆகியவை சரியாக இருந்தால் உலகையே ஆளலாம் என்றும் எடுத்துரைத்தார். பேரறிஞர் அண்ணா, மகாத்மா காந்தி, ஜிடி நாயுடு, அப்துல் கலாம் ஆகியோரை போல் நல்லவராய் வாழ்ந்தால் உலகமே கொண்டாடும் என்று அவர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் அறிவுரை கேட்டு நடக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் கைபேசி போன்ற மின்னணு சாதனங்களை தவிர்த்து நேரத்தை செலவிட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.
ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் இரா.மதிவாணன் நன்றி வரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை தமிழ் துறை தலைவர் முனைவர் பிரபாகரன் மற்றும் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்கள். இந்த விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment