Sunday, March 17, 2024

வியாழனின் துணைக்கோளான ஈரோப்பாவில் 1000 டன் ஆக்ஸிஜன்; வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு.

வியாழனின் துணைக்கோளான ஈரோப்பாவில் 1000 டன் ஆக்ஸிஜன்; வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு.


நாம் வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் துணைக்கோள்களை பற்றியும் அதில் ஈரோப்பா என்னும் துணைக்கோள் பற்றியும் பார்த்தோம்.. இதில் சமீபத்திய தகவலாக ஈரோப்பா துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவின் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது.

வியாழன் கிரகத்தை சுற்றி வரும் ஈரோப்பா எனும் துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவில் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. மனித உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இந்த கிரகத்தில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் மிகப்பெரிய கடலே ஈரோப்பாவிற்கு புதைந்துள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வியாழன் கிரகம்.... சூரிய குடும்பத்தில் உள்ள மிக பெரிய கிரகம். பூமியைப் போல 1300 பூமியை போல வடிவில் அடுக்கினால் எவ்வளவு பெரிய உருவம் கிடைக்குமோ அதுதான் வியாழன் கிரகம். உருவத்திற்கு ஏற்றார் போல அதை சுற்றும் துணைக்கோள்களான நிலாக்களின் எண்ணிக்கையும் அதிகம். இதுவரை 95 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் வியாழன் கிரகத்தை சுற்றி கண்டறியப்பட்டுள்ளது. கலிலியோ கலிலி தனது தொலைநோக்கியின் மூலமாக முதன் முதலில் வியாழன் கிரகத்தை பார்த்த நிலையில் 1989 ஆம் ஆண்டு அவர் பெயரிலேயே ஒரு விண்கலத்தை நாசா உருவாக்கி முழுக்க முழுக்க வியாழன் கிரகத்தின் ஆராய்ச்சிக்காக அனுப்பியது.

கலிலியோ விண்கலம் மனிதர்கள் கண்டிராத பல அற்புதமான தகவல்களை வியாழன் கிரகத்தை பற்றி தொடர்ச்சியாக அனுப்பியது. அதில் முக்கியமான ஒன்று வியாழன் கிரகத்திலேயே நான்காவது பெரிய துணைக்கோளான ஈரோப்பாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக கூறியது. கலிலியோ விண்கலத்தின் ஆய்வுக்குப் பிறகு ஐரோப்பா துணைக்கோளின் மீது விஞ்ஞானிகள் ஆர்வம் அதிகரித்தது. தொடர்ச்சியாக வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் ஈரோப்பா துணைக்கோள் குறித்தான பல தரவுகளையும் தகவல்களையும் விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக சேகரித்தனர்.

சுமார் 1940 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த ஐரோப்பா துணைக்கோளில் நீர் மூலக்கூறுகள் மற்றும் மனிதர்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பதை அறிவதற்காக ஜூனோ எனும் விண்கலம் 2011 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. 2016ஆம் ஆண்டு வியாழன் கிரகத்தை நெருங்கிய ஜூனோ விண்கலம் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல புகைப்படங்களையும் வியாழன் கிரகத்தை சுற்றியுள்ள வேதி பொருட்கள் மற்றும் தனிமங்களின் தரவுகளையும் மனிதர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் ஜூனோ விண்கலம் ஈரோப்பா துணைக்கோளின் மேற்பரப்பிலிருந்து 220 மைல்கள் அளவிற்கு பறந்து பல தரவுகளை சேகரித்தது. அதில் ஒவ்வொரு வினாடிக்கும் ஈரோப்பா துணைக்கோளிலிருந்து 12 கிலோ கிராம் அளவிற்கு ஆக்சிஜன் உருவாக்கப்பட்டு வெளியேறுவதாக ஜூனோ விண்கலத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பா துணைக்கோளில் மேற்பரப்பில் பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் பனிக்கட்டிக்கு அடியில் மிகப்பெரிய கடல் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்பரப்பிற்கு கீழே ஈரோப்பா கிரகத்தில் அதிக அளவில் நீர் மூலக்கூறுகள் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் உயிர்கள் வாழ சாத்தியமான ஒரு சூழல் அங்கு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதோடு 24 மணி நேரத்திற்கு ஆயிரம் தண்ணீருக்கும் மேல் ஆக்ஸிஜன் துணைக்கோளிலிருந்து வெளியேற்றப்படுவதாக ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தைச் சுற்றி ஐரோப்பா துணைக்கோள் அமைந்திருக்கும் பகுதி உயிர்கள் வாழ சாத்தியமுள்ள இடம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


வியாழன் கிரகத்தின் ரேடியேஷன் பெல்ட்டுக்கு இடையில் இந்த கிரகம் அமைந்திருப்பதால் உயிர்கள் வாழும் அளவிற்கு வெப்பநிலை நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு இதற்கு முன்பு அனுப்பப்பட்ட வியாழன் விண்கல திட்டத்தை விட ஜூனோ முக்கியமான ஒன்றை கண்டறிந்துள்ளது. அதுதான் வியாழன் கிரகத்தில் இருந்து வெளியேற்றப்படும் அயனிகள் மூலமாக ஆக்சிஜன் உருவாகும் எனும் உண்மை. வியாழனின் அயனியாக்கம் செய்யப்பட்ட துகள்கள் பனிக்கட்டி மேற்பரப்பில் மோதி, நீர் மூலக்கூறுகளை இரண்டாகப் பிரித்து ஆக்ஸிஜனை உருவாக்குகின்றன என்றும் அவை ஈரோப்பா கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கடலை உருவாக்கிய வருவதாக கூறப்படுகிறது. ஈரோப்பா துணைக்கோளில் உள்ள நீர் மூலக்கூறுகளை ஜூனோ விண்கலத்தில் உள்ள ஒன்பது ஆய்வு கருவிகள் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக வியாழன் மற்றும் ஈரோப்பா கிரகத்திற்கு இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் மனிதர்கள் வாழ சாத்தியம் குறித்தும் ஆராய்ச்சியில் ஜூனோ விண்கலம் ஈடுபடும் என நாசா தெரிவித்துள்ளது.


ஐரோப்பா கிரகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் நீர் மூலக்கூறுகள் அதிக அளவில் இருப்பதும் அவை தொடர்ச்சியாக வியாழன் கிரகத்தின் அயனியாக்கும் தன்மை காரணமாக உருவாக்கப்படுவது ஜுனோ கிரகம் கண்டறிந்துள்ளது. ஆக்சிஜனும் நீரும் இருப்பின் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிக அதிகம் என தெரிவிக்கும் விஞ்ஞானிகள் விரைவில் ஈரோப்பா துணைக்கோளுக்கு ரோபோட்டிக் விண்கலம் அனுப்பப்படும் என தெரிவிக்கின்றனர். பூமியைத் தாண்டி வேறு ஏதும் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா எனும் ஆர்வத்தை மனித குலம் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நிலையில் அதில் முக்கிய மைல்கலாக நமது பூமிக்கு அருகில் உள்ள உயிர்கள் வாழும் சாத்தியமுள்ள துணைக்கோளாக ஈரோப்பா இருப்பதை மனித குலம் கண்டறிந்துள்ளது.

Thanks :PuthiyathalaimuraiTV 

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி.

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி. கொடைக்கானல் மற்றும் காவலூர் வான் ஆய்வகங்களில் இரு நாள் சிறப்பு நிகழ்...