Wednesday, September 11, 2024

இனி சுங்க கட்டணம் வசூல் இல்லை செயற்கைக்கோள் முறையில் கட்டணம் வசூல் புதிய நடைமுறையை கொண்டு வரும் மத்திய அரசு.

இனி சுங்க கட்டணம் வசூல் இல்லை செயற்கைக்கோள் முறையில் கட்டணம் வசூல் புதிய நடைமுறையை கொண்டு வரும் மத்திய அரசு.


நாட்டில் சுங்கச்சாவடி முறையில் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது சில நேரங்களில் சுங்கச்சாவடியில் அடித்தடிகள் ஏற்படுகிறது வாக்குவாதங்கள் ஏற்படுகிறது மேலும் பண்டிகை நாட்களில் நீண்ட தூரம் வாகனங்கள் நிற்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பாஸ்டேக் என்னும் முறையை கொண்டு வந்தது இருப்பினும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை, புனே, கொல்கத்தா, டெல்லி, மகாராஷ்டிரா, போன்ற இடங்களில் பண்டிகை நாட்களில் நீண்ட தூரம் வாகனங்கள் நிற்கிறது.

பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்தாலும் இது முழுமையான வெற்றிபெறவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் இனி வரும் காலங்களில் வாகனங்களில் நேரடியாக ஜிபிஎஸ் கருவி பொருத்தி,வங்கிகளில் இருந்து பணம் வசூல் செய்யப்படும் முறையே சாலை போக்குவரத்து துறை அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் கட்டண வசூல் வசதியுடன் கூடுதலாக புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு - மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியாணாவில் உள்ள பானிபட் – ஹிஸார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 (பழைய எண் 71A) ஆகிய இரு நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20,000 கிலோ மீட்டர் தூரத்துக்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் வேகத்தை அதிகரிக்க அதிவேக மாதிரி முறையை பின்பற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.

வாகனங்களில் செயற்கைக்கோள் இணைப்புடன் ஆண் போர்டு யூனிட் எனப்படும் ஓபியூ கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும் வாகனம் சுங்க கட்டண சாலைகளில் பயணிக்கும் போது முதல் 20 கிலோமீட்டர் பிறகு அந்த வாகனம் பயணிக்கும் தூரம் செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு.

வங்கிகளில் இருந்து பணம் தானாக பிடித்தம் செய்யப்படும் (ஜிஎன் எஸ் எஸ்) அடிப்படையில் ஓ பி யூ கருவிகள் நாளடைவில் பெரும்பாலும் வாகனங்களில் செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுங்கச்சாவடிகள் படிப்படியாக அகற்றப்பட்டுவிடும்.

அதுவரை பாஸ்டேக் நடைமுறை ஜிஎன்எஸ் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது நாட்டில் முதல் கட்டமாக ஹைதராபாத், சென்னை, பெங்களூர், பூனே, கொல்கத்தா, போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில் இது கொண்டுவரப்பட உள்ளது.

அன்போடு யூனிட் என்ற சிறிய கருவி பாஸ்டேக் போலவே அரசு இணையதளங்களில் கிடைக்கும் புதிதாக விற்பனைக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களிலும் தயாரிப்பு நிறுவனங்களை இதனைப் பொருத்தி விற்பனை செய்யும்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...