Saturday, August 23, 2025

தேசிய விண்வெளி தினம்2025 National Space Day 2025.

தேசிய விண்வெளி தினம்2025  National Space Day 2025.

இந்தியா முழுவதும் தேசிய விண்வெளி தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நிலவில் சந்திராயன் 3  வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது 

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ISRO சந்திராயன் 3 வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது முக்கியமான இந்திய விண்வெளி துறையில் ஒரு மைல் கல். இந்த வெற்றியை கொண்டான பிரதமர் ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி நாளாக அறிவித்தார். 

விக்ரம் என்ற நிலா தரை இறங்கியையும் பிரக்கியான் என்ற நிலா தரை இறங்கி ஊர்தி கொண்டதுதான் சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கிய அந்த இடம் சிவசக்தி புள்ளி என அழைக்கப்படுகிறது. 

இன்னும் எதிர்காலங்களில் ஆம்ஸ்ட்ராங் சென்றது போல் இந்திய விண்வெளி வீரர்களும் நிலாவிற்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்று நாம் பூமியிலிருந்து நிலவை பார்க்கின்றோம். எதிர்காலங்களில் விண்வெளி ஓரங்களில் நாம் சென்று நிலவிலிருந்து பூமியை பார்க்கும் காலம் விரைவில் வரும். 

தேசிய விண்வெளி தினத்தை இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளும் பொது நிறுவனங்களும் பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.







இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Tuesday, August 5, 2025

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி.

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி.

கொடைக்கானல் மற்றும் காவலூர் வான் ஆய்வகங்களில் இரு நாள் சிறப்பு நிகழ்ச்சி



செப்டம்பர் 7, 2025 அன்று, இந்தியா முழுவதும் காணக்கூடிய ஒரு அரிய முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. மக்கள் வெறும் கண்களால் இதை நேரடியாகப் பார்வையிடக்கூடிய வகையில் உருவாகும் இந்த கிரகண நிகழ்வை, கல்வி மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நோக்கில் மக்களிடையே பரப்பும் நோக்கில், "பயிற்றுவிப்பர்களுக்கான பயிற்சி" நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்திலும், அதே தேதிகளில் காவலூர் வைணுபாபு வான் ஆய்வகத்திலும் நடைபெற்றது.




இந்த இரு நாள் நிகழ்ச்சிகளில்,


* சந்திர கிரகணத்தின் அறிவியல் அம்சங்களை விளக்கும் விரிவான உரைகள்,கலந்துரையாடல்கள்,


தொலைநோக்கி அமைப்பும் செயல்விளக்கம்,


மாணவர்களுக்கான அறிவியல் விளக்கக் கண்காட்சிகள்

மற்றும் பல அனுபவ செயல்பாடுகள் இடம்பெற்றன.



தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 70 வான் இயல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, எதிர்கால சந்திர கிரகண விழிப்புணர்வு பணிக்கான திட்டங்களை உருவாக்கினர். குழு விவாதங்கள், செயல் திட்டங்கள் மற்றும் புதிய நோக்குகள் ஆகியவையும் இந்த பயிற்சியின் முக்கிய அங்கங்களாக இருந்தன.


இந்தப் பயிற்சியை இந்திய வானியற்பியல் மையத்தின் அறிவியலாளர்கள், திட்ட இயக்குநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்து, திறமையாக வழிநடத்தினர்.

உலகை உற்று நோக்கவைக்கும் இந்த சந்திர கிரகணத்தை, மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வுடன் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

முனைவர் P. தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

Saturday, August 2, 2025

யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025)

யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025)


தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மாநில கவுன்சில், அறிவியல் பலகை, திருச்சி பிஷப் கல்லூரி ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன்  பவுண்டேஷன் மற்றும் திருச்சி அஸ்ட்ரோகிளப் இணைந்து நடத்திய  யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் (YASSC-2025) ன் திருச்சி மண்டல மாநாடு பிஷப் ஹீபர் கல்லூரியில் வெள்ளி (01/08/2025) அன்று நடைபெற்றது.


மாநாட்டின் துவக்க விழாவிற்கு YASSC  திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை தாங்கினார்.

 திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா வரவேற்றார். பிஷப் ஹீபர் கல்லூரி அறிவியல் புல தலைவர் டாக்டர்.வயலட் தயாபரன் தொடக்க உரையாற்றினார். பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகளை விளக்கி YASSC - 2025 மாநில  ஒருங்கிணைப்பாளர் ஜோசப்பின் பிரபா உரையாற்றினார். முடிவில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். 

இந்த மாநாட்டில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


 மாணவர்கள் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தல் (paper presentation) , டிஜிட்டல் முறையில் தகவல்கள் அளித்தல் ( E - content development ), வானவியல் விளையாட்டு உருவாக்குதல்( Astro Games),சுவரொட்டி விளக்கக் காட்சி ( poster presentation) உள்பட ஆறு தலைப்புகளில் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்தனர். 

7 கல்லூரியில் சேர்ந்த 25 பேராசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர். 

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்டு சயின்ஸ் சொசைட்டியின்   மாநில பொதுச் செயலாளர் மனோகர்,

ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் டாக்டர் ரவிச்சந்திரன், வே டூ சக்ஸஸ் நிறுவனர் சின்னப்பன், திருச்சி ராக்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்த்கார்த்திக், திருச்சி பிளஸ் சிவக்குமார், சாவித்திரி, YASSC மாநில  ஒருங்கிணைப்பாளர் ஜோசப்பின் பிரபா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கினர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சாந்தி, உமா, பிரகாஷ், மோசஸ், ரமேஷ், பால சரவணன், ஜெயபால், அமிர்த ஜெயபால், ஆண்டி ராஜ் மகேஸ்வரன், ஸ்டேனீஸ் ரத்தினம், திலகவதி உள்ளிட்ட ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 15, 16, 17-ந்தேதிகளில்  சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற உள்ளது.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  • இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

தேசிய விண்வெளி தினம்2025 National Space Day 2025.

தேசிய விண்வெளி தினம்2025   National Space Day 2025. இந்தியா முழுவதும் தேசிய விண்வெளி தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  நிலவில் சந்திராயன் ...