Monday, August 5, 2024

நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை ரூ.75,000-விண்ணப்பிப்பது எப்படி?

நான் முதல்வன் திட்டம்.. யு.பி.எஸ்.சி. ஊக்கத்தொகை ரூ.75,000-விண்ணப்பிப்பது எப்படி?



நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வு பற்றிய  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  https://portal.naanmudhalvan.tn.gov.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத்‌ திட்டச்‌ செயலாக்கத்‌ துறை, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ ஊரகக்‌ கடன்கள்‌ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


இந்நிலையில் 2024-2025 க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதிப்பீட்டுத் தேர்வு

UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 15.09.2024 அன்று நடத்தப்பட உள்ளது.  இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் விதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/prelims_registration/ என்ற இணையதளத்தில் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, நாளை (02.08.2023 அன்று) முதல் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2024

என்ன அம்சங்கள்?

"நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவின்‌ கீழ்‌, அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது.  இப்போட்டித்‌ தேர்வு பிரிவில்‌ மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ பயிற்சி வகுப்புகள்‌ இலவசமாக வழங்கப்படும்‌. இதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும். 

அரசுப்பணி ஒன்றையே கனவாகக்‌ கொண்டுள்ள ஆயிரம்‌ ஆயிரம்‌ இளைஞர்களின்‌ கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின்‌ நோக்கம்‌. மத்திய அரசுப்‌ பணி போட்டித் தேர்வுகளில்‌ தமிழர்களின்‌ பங்கேற்பை கணிசமான அளவில்‌ அதிகரித்து வெற்றிபெற செய்வதோடு மட்டுமல்லாமல்‌ கூடிய விரைவில்‌ ஐஐடி, என்‌.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள்‌, அகில இந்திய மருத்துவ நிறுவனம்‌ ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில்‌ ஆயிரக்கணக்கான தமிழ்‌ இளைஞர்கள்‌ பயிலும்‌ வண்ணம்‌ குமரி முதல்‌ இமயம்‌ வரை நம்‌ அறிவை விரிவு செய்ய இத்திட்டம்‌ விசாலப்‌ பாதை வகுக்கும்‌ என்ற நோக்கத்தையும்‌ கொண்டு "நான்‌ முதல்வன்‌" போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Notification Link 




இது போன்ற தகவல் பெற

Saturday, August 3, 2024

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் பேராபத்து.. ஆய்வாளர்கள் வார்னிங்.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் பேராபத்து.. ஆய்வாளர்கள் வார்னிங்.



வெறும் 10 நாட்கள் என திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம், 50 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சுனிதா தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.


பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.


போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.


இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.


ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார் லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.


ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.


இப்படி இருக்கையில், சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால் அவர் தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


விண்வெளியில் மனிதர்கள் அதிக நாட்கள் இருப்பதால் சில சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதில் முக்கியமானதுதான் எடையிழப்பு மற்றும் தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு பிரச்னை.


விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும். எனவே தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை கிடையாது. தசைகள், எலும்புகளின் பயன்பாடு குறைவதால் நாளடைவில் தசை நார் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் தசை செயல்பாடு பலவீனமடையும். எலும்பு விஷயத்திலும் இதுதான் நடக்கும். எலும்பு பலவீனமடைந்து, அது உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.


இது தவிர கண்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது விண்வெளியில் இருப்பதால் மூளை மற்றும் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இது மங்கலான பார்வை, இரட்டை பார்வை மற்றும் கண் திரிபு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது சுனிதா வில்லியம்ஸும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.






இது போன்ற தகவல் பெற

Saturday, July 20, 2024

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலா திருவிழா.



சந்திரனில் மனிதன் முதன்முதலில் இறங்கியதை நினைவுகூரும் வகையில் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. ஜூலை 20, 1969 அன்று, அப்பல்லோ 11 சந்திரனுக்கு முதல் மனிதர்களை ஏற்றிச் சென்றது. இந்த நாளில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் இரண்டரை மணி நேரம் செலவிட்டார். நிலவில் மனிதனை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற மைல்கல்லையும் இந்த நாள் குறிக்கிறது. 1971 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன், மனிதன் முதன்முதலில் நிலவில் இறங்கியதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதியை தேசிய நிலவில் இறங்கும் தினமாக அறிவித்தார்.





19.7.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி புதிய வளாகத்தில், திருச்சி- புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் இரமேஷ் மற்றும் குழுவினர்  Celestron 6SE 6" Advanced வானியல் தொலைநோக்கி மூலம் நிலவைக் காணும் நிகழ்வு நடத்தப்பட்டது. பெண்ணாடம் பகுதியைச் சார்ந்த பல பள்ளிகளில் இருந்து மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் இரமேஷ் மாணவர்களுடன் கலந்துரையாடி, நன்கு வினாக்கள் கேட்ட மாணவர்களுக்கு விண்ணியல் தொடர்பான விளக்க அட்டைகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம்  வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.







இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் சூரிய வடிகட்டி வழியாக சூரியனின் கரும்புள்ளிகள் மற்றும் அழகிய நிலா ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. முதுநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் சந்தோஷ்குமார், அனந்தராமன், இளநிலை இரண்டாம் ஆண்டு  இயற்பியல் அருட்செல்வன்  மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியல் ஸ்ரீதர்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர். இந்த விழாவில் 2000க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும்  பொதுமக்கள்  பங்கு பெற்றனர். நேரு நினைவுக் கல்லூரி, பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிலா திருவிழாவை நடத்தியது.மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது. 






நேரு நினைவுக்கல்லூரி கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாடம் தலைமை ஆசிரியர் திரு.ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழக செயற்குழு உறுப்பினர் திரு. எழிலன் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.




Tuesday, July 16, 2024

பூமியின் சுழற்சியில் மாற்றமா? விண்வெளியில் நடப்பது என்ன?

பூமியின் சுழற்சியில் மாற்றமா? விண்வெளியில் நடப்பது என்ன?





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...