Tuesday, June 8, 2021

நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் - உலகப் பெருங்கடல்கள் நாள் இன்று (World Oceans Day) (ஜூன் 8).

நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் உலகப் பெருங்கடல்கள் நாள் இன்று (World Oceans Day) (ஜூன் 8).

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் ஜூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 

உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. நாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கடலில் கலக்கின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் கடல் மாசுபடுவது குறைந்தது. கடல்வாழ் உயிரினங்கள் எவ்வித அச்சமின்றி வந்து சென்றதை பார்க்க முடிந்தது. மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது. கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது. உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.

                         

கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், எண்ணெய் துரப்பணம், துறைமுகக் கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் முதலிய குப்பைகளைக் கொட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடல்களின் சீரழிவுக்கு முக்கியக் காரணங்கள். உலகளாவிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு பிளாஸ்டிக் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இன்று, ஒவ்வொரு வருடமும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கிறது. ஆண்டுதோறும் 100,000 கடல் வாழ் விலங்குகள் இதனால் உயிரிழக்கின்றன. அளவுக்கு அதிகமான மீன் இனங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகப் பெரும்பாலான கடல் உயிரினங்கள், மீன்களின் தொகை அதிவேகமாகக் குறைந்துவருகிறது. இன்னும் 12 வருடங்களில் உலக உணவு மீன் இனங்கள் வெகுவாகக் குறைந்துவிடலாம் எனச் சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 Ocean Day GIFs - Get the best GIF on GIPHY

கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல்கள் இன்றியமையாதவை. நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. கடல் வழி பல நாடுகளுக்குப் பயணிகள் பயணிக்கவும், சர்வதேச வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்குகின்றன. இப்படிப் பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையில் கடல் வளங்கள் மிக முக்கியக் பங்கை ஆற்றுகின்றன. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பெருங்கடல்கள், சிறு கடல்களின் பெருமையை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம். 

கடல் மாசுபாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தேவையற்ற விமான, கார் பயணங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா வகையான சக்திப் பயன்பாட்டையும் குறைக்கலாம். லிப்ட் வேண்டாம் என்று சொல்லி படியேறலாம். இவற்றின் மூலம் கரியமில வாயு காற்று மண்டலத்தில் கலப்பதைக் குறைத்து, கடல்களின் அழிவை மட்டுப்படுத்தலாம். பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்வதின் மூலமும், அவை கடலை அடைவதைக் குறைக்கலாம். பொருள் வாங்க கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். கடல் பிரயாணத்தின் போது கப்பலிலிருந்து எதையாவது துாக்கி எறியவேண்டாம்.


Ocean World Ocean Day GIF - Ocean WorldOceanDay HaveAGreatWorldOceanDay -  Discover & Share GIFs

கடற்கரை மகிழ்ச்சி தரும் இடம். எனவே அதனைப் பாதுகாப்பது நம் கடமை. கடற்கரையை விட்டு வெளியேறும் பொழுது இருந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வோம். நாம் எங்கு வாழ்ந்தாலும் கடலுக்கும் நமக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நமது சின்னஞ்சிறு செயல்பாடுகள்கூட கடலின் நலனுக்கு கேடுகள் விளைவிக் கின்றன. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடல் மற்றும் அதன் உயிரினங்களுடன் பல வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே கடலைப் பாதுகாப்போம்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...