Wednesday, July 28, 2021

X-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசைபெற்ற டோரதி மேரி ஹோட்ஜ்கின் நினைவு தினம் இன்று (ஜுலை 29, 1994).

X-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசைபெற்ற டோரதி மேரி ஹோட்ஜ்கின் நினைவு தினம் இன்று (ஜுலை 29, 1994). 

டோரதி மேரி ஹோட்ஜ்கின் (Dorothy Mary Hodgkin) மே 12, 1910ல் எகிப்தின் கெய்ரோ நகரில் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1932ம் ஆண்டு வேதியியல் பட்டம் பெற்றார். 1933ல் படிகவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர், ஜே.டி.பெர்னால் என்ற மருத்துவருடன் இணைந்து, ஒரு உருண்டை புரதத்தின் எக்ஸ் கதிர் மாதிரியை முதல் முதலாகப் பதிவு செய்தார். இதன் மூலம் ஒரு புரத மூலக்கூறின் வடிவமைப்பு நிலையானது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், படிக அடுக்கு மூலக்கூறுகளையும் அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புகளின் மாதிரிகளையும் ஆய்வு மூலம் விளக்கினார். முப்பரிமான கணக்கீட்டுக்கு வழிவகை செய்த மேரி ஆய்வு வேதியியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது. 1937ல் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற தாமஸ் ஹட்ஜ்கின் என்பவரை மணந்து கொண்டார். 1947ல் பிரிட்டனின் அறிவியல் நிறுவனமான அரச கழகத்தின் உறுப்பினரானார். 1948 முதல் 1956 வரை காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பேரசிரியராகப் பணியாற்றினார். 


Dorothy Hodgkin. British Biochemist who revolutionized… | by Sci-Illustrate  | Sci-Illustrate Stories | Medium
 

1942 லிருந்து 1949 வரை மேரி பென்சிலின் அமைப்பை அறிய முற்பட்டார். 1945ம் ஆண்டே எக்ஸ் கதிர் படிகமாக்கல் மூலம் அதை கண்டுபிடித்தாலும் அவர் ஆய்வு முழுமைபெற மேலும் நான்கு வருடங்கள் ஆனது. 1955ல் வைட்டமின் B-12 முதல் எக்ஸ் கதிர் சிதறல் படத்தை எடுத்தார். 1961ம் ஆண்டு மேரி இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் B-12ன் அமைப்பை உறுதி செய்தார். வைட்டமின் B-12 இரத்தச் சிவப்பணுக்களை உருவாக்கும் தன்மை பெற்றதால் இந்தக் கண்டுபிடிப்பு இரத்தசோகை நோய்க்கு சிகிச்சையாகப் பயன்பட்டது. B12ன் அமைப்பை கண்டுபிடித்தமைக்காக 1964ஆம் ஆண்டு மேரி நோபல் பரிசு பெற்றார். 1934ல் தொடங்கிய இன்சுலின் ஆய்வு மிகவும் அசாதாரண ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அவருக்கு ஒரு சிறிய மாதிரி படிக இன்சுலின் தேவைப்பட்டு ராபர்ட் ராபின்சன் மூலம் வழங்கப்பட்டது. அந்த ஹார்மோன் உடலில் ஏற்படுத்தும் சிக்கலான மற்றும் பரந்த விளைவால் இன்சுலின் அவரது சிந்தனையைத் தூண்டியது. எனினும், இன்சுலின் மூலக்கூறின் சிக்கலான அமைப்பை கண்டறிய போதுமான எக்ஸ் கதிர் அப்போது உருவாக்கப்படவில்லை. இந்நுட்பத்தை மேம்படுத்த அவருடன் இணைந்து பலரும் பல ஆண்டுகள் முயற்சி செய்தனர். 35 ஆண்டுகள் கழித்து, 1969ல் இன்சுலினின் அமைப்பு அவரது குறித்த ஆய்வு இறுதி முடிவை எட்டியது.

                                 

மேரியின் அறிவியல் வழிகாட்டியும் அறிவியல் உலகில் புகழ்பெற்ற அறிவியலாளரும், பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான பேராசிரியர் ஜான் டெஸ்மாண்ட் பெர்நேலின் தாக்கம் இவரது அறிவியல் மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்தது. உலகின் பல நாடுகளில் 75க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்த பெருமையக்குரியவர். இவர் 1965ல் ஆர்டர் ஆப் மெரிட் பெற்ற இரண்டாவது பெண் (புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்குப் பிறகு), காப்லே பதக்கம் (2014) பெறும் முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். 1970 ஆம் ஆண்டு டோரத்தி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். 1972 முதல் 1978 வரை சர்வதேசப் படிவியல் கூட்டமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். X-கதிர் படிகவியலுக்கான நோபல் பரிசை 1964ம் ஆண்டு பெற்றார். அணு அமைப்பை விளக்க எக்சு படிவ வரைபடங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் படிவயங்களிலுள்ள அணுக்கள் ஒரே மாதரியான தொடர் அமைப்பைப் பெற்றவை என்பதைக் கண்டுபிடித்தார். மேரி ஹோட்ஜ்கின் ஜுலை 29, 1994ல் தனது 84வது அகவையில் இங்கிலாந்தின் இஸ்மிஸ்டன் நகரில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...