Friday, August 20, 2021

சிறிய நட்சத்திரம் 'சூப்பர் நோவா' தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 21, 1995).

சிறிய நட்சத்திரம் 'சூப்பர் நோவாதோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்தநோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 21, 1995).

சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) அக்டோபர் 19, 1910ல்இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில்) சி.சுப்பிரமணியன் ஐயருக்கும்சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். லாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர்பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்துஅதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர்.சி.வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 

1928 இல்ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போதுசென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர்அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன்அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன்அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும்அதற்கடுத்த வருடம் 19ஆவது வயதில்இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே மேலும் இரு கட்டுரைகளும்  பதிப்பாயின. 1930 ஆம் ஆண்டுஇந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்றுசந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார். 

பேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்துஅங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர்இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர்விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல்தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர்மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

                             subrahmanyan chandrasekhar | Tumblr

சந்திரசேகர்க்கு இயற்பியல்மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது. அதில் இவர் சிறந்து விளங்கினார். வான் இயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம்தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால்அதன் உட்கரு 'அணுகுண்டுபோல வெடித்து பிரகாசமான 'சூப்பர் நோவாஎன்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார். பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்.

             Chandra finds evidence for serial black hole eruptions in NGC 5813 –  Astronomy Now

சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல்இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும்வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும்பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில்விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டுஇவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப்  பணியாற்றிக் கொண்டிருந்த அவர்இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதேநன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்துஅவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார். நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர்சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகஸ்ட் 21, 1995ல் தனது 84வது அகவையில்அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...