Monday, April 18, 2022

கல்லூரி மாணவர்களுக்கான கலை போட்டியில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவ, மாணவிகள்.

கல்லூரி மாணவர்களுக்கான கலை போட்டியில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவ, மாணவிகள்.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், பேச்சுப் போட்டிகள் ஏப்ரல் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற்றது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஏப்ரல் 16-ந் தேதி எல்ஐசி காலனியில் உள்ள மயன்நுண்கலைப் பள்ளியில் நடைபெற்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் கவிதை, விடுதலை போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் பாடல் எழுதுதல், தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகளும் மற்றும் பேச்சுப் போட்டியும் ஏப்ரல் 17-ந் தேதி உறையூர் ஆர்.சி. பள்ளி அருகில் உள்ள டி.என். எம்.எஸ்.ஆர்.ஏ அரங்கத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.



தில் நேரு நினைவு கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவி ரா.கார்த்திகா (2K19UP54) பாட்டு போட்டியில் இரண்டாம் இடமும், கவிதை போட்டியில் ஆறாம் (ஆறுதல் பரிசு) இடமும் பெற்றார். மூன்றாம் ஆண்டு தாவரவியல் மாணவன் ஞா.நவீன் குமார் கவிதை போட்டியில் நான்காம் (ஆறுதல் பரிசு) இடம் பெற்றார்.

முதலாம் ஆண்டு வணிக மேலாண்மை மாணவி ச.துர்கா தேவி பேச்சுப் போட்டியில் நான்காம் (ஆறுதல் பரிசு) இடம் பெற்றார். மேலும் மூன்றாமாண்டு இயற்பியல்   மு.தனலட்சுமி, க.கவிப்பிரியா, ரா.மீரா, ரா.சரண்யா, ம.சுஷ்மிதா, சி.நிவேதா, ரா.சுஸ்மிதா, ச.ராஜபாண்டி, செ.தாரணி, புவனா, இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவன் சு.முரளி, தமிழ் துறையை சேர்ந்த ஏ.கிருபா கணேஷ், செ.லைலா, த.இளஞ்சியம், சு.ஐஸ்வர்யா, சீ.கமலஸ்ரீ சு.ராஜேஸ்வரி, செ.சாந்தி, வ.சுகாசினி வணிகவியல் துறையை சேர்ந்த ர.அர்ச்சனா போன்றோர் கவிதை, கட்டுரை, பேச்சு ஓவியம் போன்ற பல போட்டிகளில் பங்கு பெற்றனர். 

மாணவர்களின் திறமைகளை இனம் கண்டு கொள்ள இப்போட்டிகள் உதவின. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ.இரமேஷ், தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் செ.மணிகண்டன், முனைவர் மு.புனிதா, செ.மணிகண்டன்  ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து பங்கு பெறச் செய்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் கல்லூரி தலைவர்  பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர்  திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர்  முனைவர்  பொன்பெரியசாமி மற்றும் கல்லூரி  சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...