Monday, April 18, 2022

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.

இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளாக திங்கள்கிழமை அமைந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

இந்திய சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 26,110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது. இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இன்றைய நிலவரம் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 836 ஆக உள்ளது. இதில் 317 பேர் சென்னைவாசிகள். 64,645 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 553 நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 4 பேர் பலியாகியுள்ளனர். ஆக மொத்தம் இதுவரை தமிழ்நாட்டில் 8,60,562 தொற்றாளிகள் பதிவாகியிருக்கிறார்கள். இதில், 8,42,862 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், இதுவரை 12,551 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதும் சமீபத்திய அரசு தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

ஆனால் சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் மோசமாக இருந்ததால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கோவிட் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,58,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் புதிய வகையைக் கண்டறிவதற்கு அறிவியலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். விரைவாகவும், எளிதாகவும் பரவும் தன்மையுடைய இந்த புதிய வகை வைரஸ்களின் காரணமாக கோவிட்-19 தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான இன்னொரு காரணம் போதிய அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பதாகும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக விலகலைக் கடைபிடிக்காமல் இருப்பது, அதிக அளவில் பரிசோதனைகள் செய்து பாதிக்கப்பட்டவர்களை கண்டறியாமல் இருப்பது மற்றும் தொடர்புகளைத் தடமறிவதில் காட்டப்படும் மெத்தனம் ஆகியவை மகாராஷ்டிர மாநிலத்தில் கோவிட்-19 தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்று அரசின் கோவிட் கட்டுப்பாட்டு குழுவைச் சேர்ந்த மருத்துவர் சஞ்சய் ஓக் பிபிசியிடம் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு ஊசி விநியோகம் ஜனவரி மாதம் தொடங்கியது. சுமார் மூன்று கோடி பேருக்கு இதுவரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வயதில் முதியவர்கள் மற்றும் இணை நோய் உடையவர்கள் ஆகியோக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் தடுப்பூசி விநியோகம் பிறருக்கும் பரவலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகமான கொரோனா தொற்று பாதிப்பு உடைய மாவட்டங்கள் பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முடக்க நிலை அமலானது.

இந்தியாவிலேயே அதிக பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் முடக்க நிலை அமல்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மகாராஷ்டிராவின் பிற மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பொது அங்காடிகள் மூடல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா தவிர கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பிற ஆறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...