Tuesday, September 26, 2023

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் முனைவர் மேதகு சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் 12வது ஆய்வகமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் கீழ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஒரு பெருமை மிக்க நிறுவனமாக, அதாவது 100 விஞ்ஞானிகள், சுமார் 175 பிற ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் 100 ஆராய்ச்சி மாணவர்களுடன் தெற்காசியவில் மின்வேதியியலில் மிகப் பெரிய ஆய்வகமாகத் திகழ்கிறது. இந்தியாவில் மின்வேதியியலில் பல்வேறு தொழில் நுட்பங்களுக்கான துவக்கத் தளமாக திகழ்வதுடன், ஏறத்தாழ 900 காப்புரிமைகள் மற்றும் 7500 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 செயல்முறைகள், 600 நிதி உதவி மற்றும் மானியத் திட்டங்கள், 450 தொழில் தொடங்க உரிமங்கள் ஆகியவைகளை இந்த தேசத்திற்கு வழங்கியதுடன், தேசத்தின் அறிவியல் வரைபடத்தில் ஒரு மைல் கல்லாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

 


இந்த ஆய்வகமானது மின்வேதியியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுடன் மின் வேதியியல் ஆய்வின் மூலம் பல்வேறு ஆராய்ச்சி வினாக்களுக்கு விடைகாணும் விதமாக செயல்படுகிறது. தனது ஆராய்ச்சிகளில் முக்கியமாக அரிமான அறிவியல் மற்றும் பொறியியல், மின் வேதியியல் பொருட்கள், மின் வேதியியல் சக்தி மூலங்கள், மின் வேதியியல் மாசுக் கட்டுப்பாடு, அடிப்படை மின் பூச்சு, மீச்சிறு (நானோ) அளவிலான மின் வேதியியல், மின் கணிம/கரிம வேதியியல் ஆகிய துறைகளில் எதிர்கொள்ளும் தொழிற்சாலை பிரச்சினைகளை சரிசெய்யும் விதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

 





செவ்வாய்க்கிழமை (26.09.23) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றதுநேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த  சுமார் 20 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரிஉலோக காற்று (metal-Air)  பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர்சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது. 








கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதுபலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM),  புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM),  X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), புற ஊதா கண்ணுறு நிறமாலைமானி (UV-Vis-NIR), நிறை நிறமாலைமானி (Mass spectrometry) போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.



Keelai News Link

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Friday, September 22, 2023

இதுதான் இறைவன் இயக்கும் நமது மனித உடல்-மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது?

இதுதான் இறைவன் இயக்கும் நமது மனித உடல்-மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது?



70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்)

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.


🧍மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. 

கடைசிவரை வளர்வது காது👂🏻 மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை  சுமார் 5 லட்சம்.

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை✋🏻 மற்றும் உள்ளங்கால்கள்🦶🏻 மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். 

இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை💪🏻

தட்டில் இருக்கும் நூடுல்சை 🍜ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.



நமது பாதங்களை🦶🏻🦶🏻 பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன


இதயம் ❤️ ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 

இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 

3 பவுண்டு கால்சியம், 

20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 

10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு 

ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என 

பல பொருட்கள் உள்ளன!!

உடலின்மொழி.

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை 

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். 

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

உலகமே எதிர்பார்த்த தருணம்.. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இன்று உயிர்த்தெழுமா?

உலகமே எதிர்பார்த்த தருணம்.. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இன்று உயிர்த்தெழுமா?




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Thursday, September 21, 2023

பூமியை மோத வரும் சிறுகோள்...22 அணுகுண்டுகளின் பவரோடு தாக்கும்? - பேராபத்தை முறியடிக்க போராடும் உலகம்.

பூமியை மோத வரும் சிறுகோள்...22 அணுகுண்டுகளின் பவரோடு தாக்கும்? - பேராபத்தை முறியடிக்க போராடும் உலகம்.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Monday, September 11, 2023

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம். 


ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட  அடையாள அட்டை ஆகும்இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும்புதிதாக ஆதார் அட்டை பெறும் போது அதில் சில தகல்வல்கள் (கைப்பேசிஎண்முகவரிபுகைப்படம்விழித்திரைமாற்றம் தேவைப்படுகிறது10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது   கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திருவரங்கம் அஞ்சல்  துறைவழியாக ஆதார் திருத்த முகாம் நேரு நினைவு கல்லூரியில் இன்று (11.09.23) முதல் ஒரு வாரம் நடைபெறுகிறது. புலிவலம் தபால் உதவியாளர் R.K. கார்த்திக் மற்றும் புத்தனாம்பட்டி தபால்காரர் K.மௌனிதா ஆகியோர் இணைய வழியாக ஆதாரில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாம் மூலம் இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்தனர்முன்னதாக இந்த முகமை கல்லூரி முதல்வர் முனைவர் .வெங்கடேசன் தொடங்கி வைத்தார்கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன்கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன்துணை முதல்வர் முனைவர் தமிழ்மணிஒருங்கிணைப்பாளர் முனைவர்மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்இயற்பியல் உதவி பேராசிரியர் பொரமேஷ் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.




இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...