Sunday, January 1, 2023

தமிழகம் முழுவதும் "ஜனவரி 7-9ல் நட்சத்திர திருவிழா-நட்சத்திரக் கூட்டங்களை பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும்  "ஜனவரி 7-9ல் நட்சத்திர திருவிழா-நட்சத்திரக் கூட்டங்களை பார்க்கலாம்.




தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அருவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து இந்த நட்சத்திர திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நட்சத்திர திருவிழாவானது நடைபெற உள்ளது அதில் சென்னை பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், கோவையில் 18க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருச்சியில் 10 இடங்களிலும் நடைபெற உள்ளது. அதில் திருச்சியில் தேசிய கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, நேரு நினைவு கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, அண்ணா அறிவியல் கோளரங்கம், உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

இந்த நட்சத்திர திருவிழா குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்.

கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு தான் உலகை புரட்டிப் போட்ட நாள் என்பதை கொண்டாடும் விதமாக முதல்முறையாக இந்த நட்சத்திர திருவிழா கொண்டாட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது அந்த மூன்று நாட்களிலும் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் இதில் பங்கு பெறக்கூடிய அனைவரும் தொலைநோக்கிகள் மூலம் வியாழன் கோளையும் நிலா நட்சத்திரங்கள் மற்ற கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக கண்டு மகிழலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும். இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய வானியல் வல்லுநர்கள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடி வானியல் தொடர்பான விளக்கங்களை கேட்டு அறியலாம் என்று கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகத்தின் தலைவர் ஜெயமுருகன், மாநில ஆலோசகர் சாந்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலின் பிரீத்தா ஜெப செல்வி, ஆலோசகர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...